தங்கம் என்பது ஆடம்பரப் பொருளாக மட்டுமல்லாமல் சிறந்த முதலீட்டு பொருளாகவும் விளங்குகிறது. தங்கத்தை வைத்திருப்பது மதிப்பை வழங்குவதோடு மட்டுமல்லாமல் மிகச்சிறந்த சொத்தாகவும் பார்க்கப்படுகிறது. நமக்கு நெருக்கடியான காலங்களில் தங்கத்தை அடகு வைத்து பண தேவைகளையும் நிறைவேற்றி கொள்ள முடியும். இவ்வாறு தங்கத்தை வைத்து வங்கிகளும் நிதி நிறுவனங்களும் கடன் கொடுப்பது உண்டு.
நகை கடன் வாங்க நினைத்தால் எந்த வங்கியில் வாங்க வேண்டும்? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி குறைவு? என்பது குறித்து எல்லாவற்றையும் ஆலோசிக்க வேண்டும். குறைந்த வட்டிக்கு நகைக் கடன்களை வழங்கும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் எவை என்று இப்பொது பார்க்கலாம்.
Bank of Maharashtra (பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா) : 7%
Canara Bank (கனரா வங்கி) : 7.35%
Union Bank of India (யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா) : 7.25 – 8.25%
Punjab & Sind Bank (பஞ்சாப் & சிந்த் பேங்க்) : 7 – 7.50%
Punjab National Bank (பஞ்சாப் நேஷனல் வங்கி) : 7 – 7.50%
SBI (எஸ்பிஐ) : 7.30%