Categories
அரசியல்

நகைக்கடன், பயிர்க்கடன்…. கடந்த ஆட்சியில் எல்லாமே தில்லுமுல்லு…. அமைச்சர் பெரியசாமி பொளேர்…!!!

தமிழகத்தின் முதல்வர் மு.க ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார். இதற்கிடையில் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர் கடன், நகைக் கடன் தள்ளுபடி அறிவிப்பை மக்கள் பெரிதும் எதிர்பார்த்துள்ளனர். ஆனால் அந்த அறிவிப்பு தாமதமாவது குறித்து முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் விளக்கமளித்தனர்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி, விவசாய பயிர்க் கடன் ரூபாய் 2,393 கோடிக்கும் மேலாக நிலத்தின் அளவிற்கு மேலாக கடந்த அரசு வழங்கியிருக்கிறது. கடந்த அதிமுக ஆட்சியில் கூட்டுறவுச் சங்கங்களில் பல்வேறு முறைகேடுகள் புற்றீசல் போல அதிகரித்துள்ளது. நகைகளை அடமானம் வைக்காமலேயே பல கோடி ரூபாய்க்கு நகை கடன் வாங்கி மோசடி செய்துள்ளனர்.

பெரும்பாலும் கவரிங் நகைகளை வைத்து தான் நகை கடன் பெறப்பட்டுள்ளது. மோசடி செய்தவர்கள் மீது விரைவில் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். அதிமுக ஆட்சியில் கூட்டுறவு சங்கங்களில் கடன் வழங்கியதில் பல்வேறு தில்லுமுல்லு நடந்துள்ளது. போலியான நகை கடனில் ஈடுபட்டவர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |