Categories
மாநில செய்திகள்

நகைக்கடன் தள்ளுபடி…. தமிழகத்தில் பெரும் அதிர்ச்சி….!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெற்ற திமுக ஆட்சியை பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட ஸ்டாலின் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டு இருந்த அனைத்து நலத் திட்டங்களையும் ஒவ்வொன்றாக செய்து கொண்டே வருகிறார்.

அதன்படி விவசாயிகள் பெற்ற நகை கடன் மற்றும் மகளிர் சுய உதவி குழு கடன் தள்ளுபடி செய்யப்படும் என தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நகை கடனுக்கு தவணை தேதி முடிந்து விட்டது. அதனால் தொகையை செலுத்த வேண்டுமென சிலருக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. இதையடுத்து கடன் தள்ளுபடி அறிவிப்பில் அரசாணை வெளியிடப் படவில்லை. அரசாணை வந்தால் மட்டுமே மற்ற விவரங்களை தெரிவிக்க முடியும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். இது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.

Categories

Tech |