Categories
மாநில செய்திகள்

நகைக்கடன் தள்ளுபடி குறித்த முக்கிய அறிவிப்பு…. தமிழக மக்களுக்கு ஹேப்பி நியூஸ்…!!!

நகை கடன் தள்ளுபடி பெற தகுதியானவர்களுக்கு பல்வேறு நிபந்தனைகளை அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நகை கடன் தள்ளுபடி குறித்து தமிழக முதல்வர் சட்டசபையில் விதி 110-ன் கீழ் அறிவித்திருந்தார். அதன்படி கூட்டுறவு வங்கிகள் 5 சவரனுக்கு உட்பட்ட நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் நகை கடனுக்கு விண்ணப்பித்தவர்களில் பெரும்பாலானோர் முறைகேடுகளில் ஈடுபட்டு உள்ளதாக தெரியவந்தது.

இதில்போலி நகைகளைக் கொண்டு கடன் பெறுவது, ஒரே நபர் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிகளில் கடன் பெறுவது போன்ற பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று உள்ளது. அதனால் தகுதியான நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு மட்டுமே நகை கடன் தள்ளுபடி வழங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தற்போது 48, 85,000 நபர்கள் நகை கடன் தள்ளுபடி விண்ணப்பித்தவர்களில் 13,30,000ஆயிரம் பேர் மட்டுமே தள்ளுபடி பெற தகுதியான நபர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் நகைக்கடன் தள்ளுபடி இன்னும் வழங்கப்படாமல் இருக்கிறது. இந்நிலையில் தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணியளவில் தொடங்கியது. இதில் அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளது. அதன்படி வேளாண் கூட்டுறவு சங்கங்களில் நகை கடன் குறித்த அறிவிப்பு ஒன்று பட்ஜெட்டில் இடம் பெற்றிருக்கிறது.

இதில் நிதியமைச்சர் P.T.R பழனிவேல் தியாகராஜன் வேளாண் கூட்டுறவு சங்கங்களில் நகை கடன் தள்ளுபடி ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். அதனால் விரைவில் நகை கடன் தள்ளுபடி வழங்கப்படும் என்பதினால் பயனாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர். அத்துடன் வட்டியில்லா பயிர்க்கடன் திட்டத்திற்கும் ரூபாய் 600 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

Categories

Tech |