தமிழகத்தில் இன்று காலை பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டவர்களுக்கு நகை கடன் தள்ளுபடி கிடையாது என்று தமிழக அரசு அறிவித்தது. அந்த அறிவிப்பில் தமிழக அரசு தெரிவித்துள்ளதாவது: “கடந்த ஆண்டு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டவர்களுக்கு நகை கடன் தள்ளுபடி கிடையாது . நகை கடன் தள்ளுபடி பெறும் பயனாளிகளின் பட்டியலை இறுதி செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நகைக்கடன் பெற்ற 48, 84, 726 பெயரில் 35,37, 697 பேருக்கு நகை கடன் தள்ளுபடி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 25% பேர் மட்டுமே நகை கடன் தள்ளுபடிக்கு தகுதியானவர்கள். 2020இல் கூட்டுறவு வங்கியில் பயிர் கடன் பெற்றிருந்தால் நகை கடன் தள்ளுபடி சலுகையை பெற முடியாது” என்றும் தெரிவித்தது. இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தற்போது நகை கடன் தள்ளுபடி தொடர்பாக அமைச்சர் பெரியசாமி விளக்கமளித்துள்ளார். கூட்டுறவுத்துறை மூலம் 5 சவரன் கீழ் வழங்கப்பட்ட 35 லட்சம் நகை கடன்களில் 14.5 லட்சம் நகைக் கடன்கள் மட்டுமே தள்ளுபடி செய்ய ஏற்புடையது. நகை கடன் தள்ளுபடி செய்பவர்களுக்கு ஜனவரி 3 முதல் நகைகள் வழங்கப்படும் என்று அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.