போலியான நகைகளை அடகு வைத்த குற்றத்திற்காக தாய் மற்றும் மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் சந்திரசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் நிதி நிறுவனம் வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் ராமன்புதூர் பகுதியை சேர்ந்த முகமது என்பவரின் மனைவியான சபியா மற்றும் அவரது மகன் அபு பைசல் ஆகியோர் கடந்த மார்ச் மாதம் சந்திரசேகரின் நிறுவனத்தில் தங்க நகைகளை அடகு வைத்து பணம் பெற்றுள்ளனர்.
அந்த நகைகளை ஆய்வு செய்த போது அது போலியானது என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து சந்திரசேகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தாய் மற்றும் மகனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.