நடிகர் விஜய் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிக்கு காரில் சென்று வாக்களித்துள்ளார்.
இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்தது. வாக்குபதிவு காலை 7 மணியிலிருந்து மாலை 6 மணி வரை நடந்தது. பதிவு செய்யப்பட்ட வாக்குகள் அனைத்தும் வருகின்ற பிப்ரவரி 22ஆம் தேதி எண்ணப்படுகின்றது. இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு மிதிவண்டியில் சென்று ஓட்டு போட்டார். தற்பொழுது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு காரில் வந்துள்ளார். இவர் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 192 வார்டில் ஓட்டுப்பதிவு செய்கின்றார். இவரின் ஓட்டு பதிவுக்காக சென்னையில் உள்ள நீலாங்கரையில் அமைந்திருக்கும் வேல்ஸ் இன்டர்நேஷனல் வாக்குச்சாவடியில் ஓட்டு போட்டார் விஜய்.
Thalapathy @actorvijay asks sorry to Public due to the crowd and media presence at the booth #TnLocalBodyElections pic.twitter.com/0bh5k6lg41
— O T F C (@OTFC_Off) February 19, 2022
இவரின் வருகைக்காக பல போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டார்கள். நடைபெறுகின்ற இந்த உள்ளாட்சித் தேர்தலில் விஜய்யின் மக்கள் இயக்கம் போட்டியிடுகின்றது. கடந்த முறை நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலிலும் போட்டியிட்டுயிருந்தது. இந்நிலையில் இந்த தேர்தலுக்கு தனது புகைப்படம் மற்றும் விஜய் மக்கள் இயக்கம் கொடி பயன்படுத்த அனுமதி தந்திருக்கிறார் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வாக்குப்பதிவு நடந்தபொழுது மக்கள் மற்றும் மீடியா இடையூறுக்கு மன்னிப்பு கேட்டு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் விஜய்.