தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று முதல் தொடங்கியது.
இந்நிலையில் ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவி விலகாமல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் செய்தால் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று சற்றுமுன் தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வெற்றி பெற்றாலும், வெற்றி வாய்ப்பை இழந்தாலும் ஏற்கனவே வகித்த பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய சட்டத்தில் இடம் உண்டு. ஊராட்சிகளின் ஆய்வாளர் என்ற நிலையில் ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வழிவகை செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.