Categories
மாநில செய்திகள்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்…. இன்று ( பிப்.16 ) தேர்தல் ஆணையம் முக்கிய ஆலோசனை….!!!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து சென்னையில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் அதிகாரிகள் இன்று ( பிப்.16 ) ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையின் போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு சட்டம் – ஒழுங்கு குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், எஸ்.பி.க்களுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் ஆலோசனை நடத்தினார்.

மேலும் சட்டம், ஒழுங்கு பாதுகாப்பு, வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச் செல்வது, பணப்பட்டுவாடா தடுப்பு ஆகிய நடவடிக்கைகள் குறித்தும், தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்தும், வாக்குச்சாவடி மற்றும் வாக்கு எண்ணும் மையங்களின் பாதுகாப்பு குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

Categories

Tech |