Categories
அரசியல் மாநில செய்திகள்

நகர்புற உள்ளாட்சி தேர்தல்…. “தேமுதிக தனித்துப்போட்டி”… கேப்டன் விஜயகாந்த்!!

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்துப்போட்டியிடும் என்று தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடும். தேமுதிக சார்பில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகளும், தொண்டர்களும் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்களை டிசம்பர் 1ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை அந்தந்த, மாவட்ட தலைமை அலுவலகத்தில் பெற்று பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை அந்தந்த மாவட்ட தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்கவேண்டும்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேமுதிகவின் சார்பில் போட்டியிடுவதற்குரிய விருப்பமனு  அளிப்பதற்கு தேமுதிகவின் நிர்வாகிகளாக இருப்பவர்களும், தேமுதிகவின் அடிப்படை உறுப்பினர்களாக இருப்பவர்களும் தகுதியானவர்கள்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Categories

Tech |