Categories
அரசியல் மாநில செய்திகள்

நகர்புற உள்ளாட்சித் தேர்தலிலும்… தனித்து களமிறங்கும் பாமக… அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு!!

நகர்புற உள்ளாட்சித் தேர்தலிலும் பாமக தனித்து போட்டியிடவுள்ளதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற இருக்கிறது. இதில் பாமக தனித்துப் போட்டியிடுவதாக ஏற்கனவே அறிவித்தது.. கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்த பாமக ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிட முடிவு செய்தது. இதனால் அதிமுக – பாமக இடையேயான கூட்டணி முடிவுக்கு வந்து விட்டதாக சொல்லப்படுகிறது.

தனித்து போட்டியிடுவதாக அறிவித்த பாமக உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில் இன்று நகர்புற உள்ளாட்சித் தேர்தலிலும் தனித்து போட்டியிட இருப்பதாக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டியளித்துள்ளார்.

முன்னதாக உச்சநீதிமன்றம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்த 4 மாதம் அவகாசம் வழங்கி இருக்கிறது. அனேகமாக ஜனவரி மாதத்திற்குள் தேர்தல் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Categories

Tech |