இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சிச்சிருகானப்பள்ளி பகுதியில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த குமார்-மஞ்சு தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு திருமணமாகி 1 1/2 வருடங்கள் ஆகிறது. இதில் குமார் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் மஞ்சுவின் வீட்டிற்கு அவரது தோழி ஒருவர் ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து வந்து 2 வாரங்களாக தங்கியுள்ளார். இதனை அடுத்து தோழி மீண்டும் ஊருக்கு சென்றதால் மஞ்சு மன உளைச்சலில் இருந்துள்ளார்.
இதனால் மஞ்சு தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற இளம்பெண்ணின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.