தனது கணவன் வேறு ஒரு பெண்ணுடன் ஓட்டலில் தனியாக இருந்ததை பார்த்த மனைவி அவரை வெளுத்து வாங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
டெல்லியின் ஆக்ரா பகுதியில் சேர்ந்த தினேஷ் கோபால் என்பவரின் மனைவி நீலம். இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில் தினேஷ் கோபாலுக்கு வேறொரு பெண்ணுடன் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் அவர் டெல்லியில் ஹோட்டல் ஒன்றில் அறை எடுத்து அந்த பெண்ணுடன் தனியாக இருந்து வந்துள்ளார். இந்த செய்தியை அறிந்த மனைவி தனது உறவினருடன் அந்த ஓட்டலுக்கு சென்றுள்ளார்.
https://twitter.com/newstracklive/status/1572154546474061825
பின் அங்கு அறையில் கணவரும் அந்த பெண்ணும் தனியாக இருப்பதை பார்த்து ஆவேசமடைந்த மனைவி செருப்பை கழற்றி கணவனை சரமாரியாக தாக்கினார். இதை கண்ட உறவினர்கள் அவரை தடுத்து நிறுத்துனர். மேலும் அந்த பெண்ணின் கணவருக்கும் நீலம் போன் செய்து இது பற்றி தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து வந்த போலீசார் மூன்று பேரையும் அழைத்துச் சென்று காவல் நிலையத்தில் விசாரணை செய்தனர்.