பீர்க்கங்காய் வைத்து இப்படி நீங்கள் சூப் செய்து சாப்பிட்டால் உடலில் உள்ள பல நோய்கள் குணமாகும்.
தேவையானவை:.
பீர்க்கங்காய் இளசு – 300 கிராம், பெரிய வெங்காயம் – ஒன்று, சோள மாவு – 2 டீஸ்பூன், தண்ணீர் – ஒன்றரை டம்ளர், நெய் – 2 டீஸ்பூன், பால் – அரை டம்ளர், சர்க்கரை, மிளகுத்தூள் – சிறிதளவு, உப்பு – தேவைக்கேற்ப.
.
செய்முறை:.
வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி நெய்யில் வதக்கவும். பீர்க்கங்காயை தோல் நீக்கி, பொடியாக நறுக்கி, தண்ணீர் விட்டுக் குக்கரில் வேகவைத்து, மத்தினால் கடையவும் (மிக்ஸியிலும் அடிக்கலாம்). பிறகு, வடிகட்டவும். வடிகட்டிய நீருடன் வதக்கிய வெங்காயத்தைச் சேர்க்கவும். சோள மாவை பாலில் கரைத்துச் சேர்த்து கொதிக்கவைக்கவும். இதில் சர்க்கரை, மிளகுத்தூள், உப்பு சேர்த்து இறக்கிப் பரிமாறவும்.