வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றதால் சர்வதேச போட்டியில் இருந்து டுவைன் பிராவோ தோல்வியுடன் விடைபெற்றார்.
சார்ஜா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இதில் ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் இப்போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல் ரவுண்டர் டுவைன் பிராவோவை வெற்றியுடன் அனுப்ப வெஸ்ட்இண்டீஸ் அணியினர் போராடினர்.
ஆனால் பிராவோ தோல்வியுடனே விடைபெற்றார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக பல வெற்றிகளை குவித்த சாம்பியன் பிராவோவின் ஓய்வு கிரிக்கெட் ரசிகர்களை ஒருபுறம் கவலை அடையச் செய்தாலும், ஜூனியர் வீரர்களுக்கு பிராவோ வழி விட்டுள்ளார் என ரசிகர்கள் மனதை ஆற்றி வருகின்றனர்.