நேற்று செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, ரொம்ப சந்தோஷத்தோட உற்சாகத்தோடு இருக்கிறேன். முதல் தடவையாக ஒரு தொகுதிக்காக வேட்புமனு தாக்கல் செய்து இருக்கின்றேன். என்னுடைய சந்தோஷத்தை சொல்வதற்கு என்னிடம் வார்த்தைகள் இல்லை. அந்த அளவிற்கு ஒரு சந்தோஷம் இருக்கிறது. இதை தான் வெற்றி கூட்டணி என்று சொல்கின்றோம். ஏனென்றால் எந்த ஒரு ஈகோ இல்லாமல், எந்த ஒரு பாரபட்சமில்லாமல் கூட்டணி ஜெயிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு வேட்புமனுத்தாக்கள் செய்த போது வருகின்ற கூட்டத்தை பார்த்தால் தெரியும்.
அனைத்து கட்சிகளுக்கும், நிர்வாகிகளுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி. ஏனென்றால் இன்றைக்கு அந்த அளவிற்கு உற்சாகம் எனக்கு கொடுத்து இருக்கிறார்கள். அவர்களுக்கு நிச்சயமாக நான் கடமைப்பட்டிருக்கிறேன். சிறுபான்மையர் ஓட்டு நிச்சயமாக பாஜகவுக்கு கிடைக்கும். 2019 இல் 1.3 பில்லியன் மக்கள் வந்து வாக்களிக்கும்போது, உலகத்திலேயே ஒரே பெரிய கட்சியாக 303 எம்,பிக்களோடு ஜெயித்து வரும் போது, அதில் சிறுபான்மை மக்களும் வாக்களித்தார்கள்.
சிறுபான்மை மக்கள் ஓட்டு போட மாட்டார்கள் என்று சொன்னால் அது எதிர்க்கட்சி சொல்கின்ற ஒரு பொய். என்னுடைய வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய சவாலாக இருந்துள்ளது. ஒவ்வொரு வாழ்க்கையிலும் சவாலை சந்திக்கும் நான் ஜெயித்து வந்துள்ளேன்.இந்த சவாலையும் நான் ஜெயிப்பேன். தோல்விக்கு என்னுடைய டிக்ஷனரியில் இடமில்லை. பாஜக கொண்டு வந்த சி.ஏ இன்னும் அமல்படுத்தப்படவில்லை. அதிமுக சார்பாக சொல்லி இருக்கிறார்கள் என்றால் ,பாஜகவில் மேலிடத்திலிருந்து பேசிக் கொள்வார்கள்.