தமிழகத் தொல்லியல் துறை சார்பில் கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி முதல் கீழடி, அகரம், கொந்தகையில் அகழ்வாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. கீழடியில் 9, அகரத்தில் 6, கொந்தகையில் 4 என மொத்தம் 19 குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றனர். இதில் கீழடியில் ஒரு உறை கிணறும், அகரத்தில் 4 உறைக்கிணறுகளும் கண்டறியப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அகரம் தளத்தில் சரிந்த நிலையில் இரண்டு அடுக்குகள் மட்டுமே வெளிப்பட்டுள்ள நிலையில் தற்போது 9 அடுக்குகள் வரை வெளிப்பட்டுள்ளது.
இதனையடுத்து 8 ஆம் கட்ட அகழ்வாய்வில் முதன்முறையாக 9 அடுங்கள் வரை வெளியிடப்பட்டுள்ளது. உறைக்கிணறுகள் 80 செ.மீ. விட்டமும், 20 செ.மீ. உயரமும் கொண்டவையாக உள்ளது. மேலும் அகழ்வாய்வு பணிகள் நடைபெற்று வருவதால் உறைக்கிணற்றின் உயரம் இன்னும் அதிகரிக்க கூடும் என்று கூறப்படுகிறது. இதற்கிடையில் கீழடியில் நடந்த 6 ஆம் கட்ட அகழ்வாயில் தமிழகத்திலேயே மிகப்பெரிய உறைக்கிணறு கண்டறியப்பட்டது. மேலும் இந்த மாதத்துடன் அகழ்வாய்வு பணிகள் நிறைவு பெற உள்ளதையடுத்து அகரத்தில் உறைக்கிணற்றின் உயரம் அதிகரிப்பதால் பணிகள் நீடிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.