Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தோட்டத்தில் பிணமாக கிடந்தது எப்படி….? திருமணத்திற்காக வந்த வாலிபர்…. நாமக்கலில் பரபரப்பு….!!

திருமணத்தில் பங்கேற்ப்பதர்க்காக ஊருக்கு சென்ற வாலிபர் தோட்டத்தில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள வீரணம்பாளையத்தில் உள்ள மரவள்ளிகிழங்கு தோட்டத்தில் மர்மமான முறையில் வாலிபரின் பிணம் ஒன்று கிடந்துள்ளது. இதனை பார்த்த அங்கிருந்த தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக பரமத்திவேலூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வாலிபரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் இறந்து கிடந்த வாலிபர் பரமத்திவேலூர் பூனே நகரில் வசிக்கும் பாரதிராஜா என்பது தெரியவந்துள்ளது. சென்னையில் பணிபுரிந்து வந்த பாரதிராஜா உறவினரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நாமக்கல் வந்த வாலிபர் மரவள்ளிக்கிழங்கு தோட்டத்தில் மர்மமான இறந்து கிடந்த சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |