தொழிற் பள்ளிகள் தொடங்குவது குறித்த முக்கிய அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தொழில் தொடங்குவது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார், அதில் காஞ்சிபுரம் 2022-2023 கல்வி ஆண்டிற்கு ஜனவரி02 முதல் ஏப்ரல் 30 வரை தொழில்கள் துவங்குதல் அங்கீகார நீட்டிப்பு, கூடுதல் தொழில் பிரிவுகள் மற்றும் அலகுகள் துவங்குதல் போன்றவற்றுக்கான விண்ணப்பங்கள் www.skilltraining.in.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
இதனை விண்ணப்பிப்பதற்கான கடைசி ஏப்ரல் 30. இதன் பின் பெறப்படும் விண்ணப்பங்கள் அனைத்தும் நிராகரிக்கப்படும்.மேலும் சென்னை பயிற்சி இணை இயக்குனர் அலுவலக தொலைபேசி:044-22501006 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு மேலும் விவரங்களைப் பெறலாம் என அவர் கூறியுள்ளார்.