சென்னையை அடுத்துள்ள எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல அனல் மின் திட்டம் தொடர்பாக நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நேற்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மேலாண்மை இயக்குனர் ராஜேஷ் லக்கானி, இயக்குனர் ஆர்.எத்திராஜ் மற்றும் உயர் அலுவலர்கள் உடன் இருந்தார்கள். இந்த ஆய்வுக் கூட்டத்தில் ஒப்பந்ததாரால் வழங்கப்பட்ட பணி நிறைவுக்கான அட்டவணை தவறாது பின்பற்றுவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அமைச்சர் உத்தரவிட்டார் அது மட்டுமில்லாமல் மற்ற இதர பணிகளான கரி கையாளும் அமைப்பு, சாம்பல் கையாளும் அமைப்பு மற்றும் கடல்நீரை குடிநீராக்கும் அமைப்பு போன்ற அமைப்புகளுடன் கூட்ட அரங்கில் ஆய்வு செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தமிழகத்தின் எரிசக்தித் தேவையின் தன்னிறைவை கருத்தில் கொண்டு கட்டுமானத்தில் இருக்கும் எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல அனல் மின் திட்டப் பணிகளை விரைந்து முடிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர், எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல அனல் மின் திட்டம் 2010 ஆம் ஆண்டு முதல் முன்னாள் முதல்வர் கருணாநிதியால் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டம் 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பணிகள் முடிக்கப்பட்டு உற்பத்தியைத் தொடங்கியிருக்க வேண்டும். தற்போது 53% பணிகள் முடிந்துள்ளது. மீதமுள்ள பணிகள் விரைவாக முடித்து மின் உற்பத்தியை தொடங்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இந்த திட்டம் 1320 மெகாவாட் மின் உற்பத்தியை தொடங்கும் போது மின்சார தேவையை பூர்த்தி செய்யப்படும். அது மட்டும் இல்லாமல் முதல் அலகில் வருகின்ற 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் உற்பத்தியை தொடங்குவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதே ஆண்டு ஜூன் மாதம் மற்றொரு யுனிட் உற்பத்தியை தொடங்குவதற்காக பணியை விரைவுபடுத்தப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து அடுத்த 5 ஆண்டுகளில் 6220 மெகா வாட் அளவுக்கு மின்சார வாரியத்தின் சொந்த ஊர் கட்டிய நிறுவு திறனில் இணைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இந்த ஓராண்டு காலத்தில் தமிழகத்தினுடைய தொழில்துறை வளர்ச்சிக்கு உதவும் வகையில் தொழில் நிறுவனங்களுக்கு விரைவான மின்சார இணைப்பு கொடுக்க வேண்டும். மேலும் தேவைக்கு ஏற்ப மின் உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். நிலக்கரி ஏறத்தாழ 4 கப்பல்களில் வந்து உள்ளது