Categories
பல்சுவை

தொழில் தொடங்க அரசு மானியத்துடன் கடன் பெறுவது எப்படி?…. வாங்க பார்க்கலாம்…..!!!!

‘நீட்ஸ்’ திட்டத்தின் கீழ், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் புதிதாக தொழில் துவங்க 10 லட்சம் முதல் 5 கோடி ரூபாய் வரை மானியத்துடன் மாவட்ட தொழில் மையம் மூலமாக கடனுதவி வழங்கப்படுகிறது. நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பை அளிக்கக் கூடிய சிறு, குறு தொழில் முனைவோராக உருவெடுக்க விரும்புவோருக்கு பல்வேறு சலுகைகள் மத்திய, மாநில அரசுகளால் அளிக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒன்றுதான் ‘நீட்ஸ்’ திட்டம்.

புதிய தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில், ‘புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம்’ (நீட்ஸ்) என்ற திட்டம், அந்தந்த மாவட்ட தொழில் மையம் மூலமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் உற்பத்தி, சேவை தொழில்களுக்கு 10 லட்சம் ரூபாய் முதல் அதிகபட்சமாக 5 கோடி ரூபாய் வரை திட்ட மதிப்பீடு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. தொழில் திட்­டங்­கள் உற்பத்தி அல்­லது சேவை என்ற வகை­யில் இருக்க வேண்­டும். இந்த திட்­டத்­தின் கீழ் வழங்­கப்­பெ­றும் உத­வியை நிலம் வாங்க, அதில் தொழிற்­சாலை அமைக்க, இயந்­தி­ரங்­கள் அமைக்க, மூதலீடு ஆகி­ய­வற்­றிற்கு உப­யோ­கப்­ப­டுத்­தப்­ப­ட­லாம்.

இத்திட்டத்தில் கடனுதவி பெற, விண்ணப்பதாரர், முதல் தலைமுறை தொழில்முனைவோராக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ஏதுமில்லை. பட்டப்படிப்பு அல்லது பட்டயப்படிப்பு அல்லது தொழில் பயிற்சி (ஐடிஐ) தேர்ச்சி பெற்ற 21 வயது முதல் 35 வரை உள்ள ஆண், பெண் விண்ணப்பிக்கலாம். சிறப்புப் பிரிவினராக (எஸ்.சி., எஸ்.டி., எம்.பி.சி., எக்ஸ்-­சர்­வீஸ்­மேன், மைனா­ரிட்டி பிரி­வி­னர், திரு­நங்­கை­கள், மாற்­றுத் திறா­னா­ளி­கள்) இருப்­பின் 45 வய­திற்­குள்­ளும் இருக்க வேண்­டும். ‘நீட்ஸ்’ திட்டத்தின் மூலம் வங்கிக் கடனுதவி பெறும் பயனாளிகளுக்கு திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் அல்லது அதிகபட்சமாக 30 லட்சம் ரூபாய் வரை தமிழக அரசின் மானியமாக வழங்கப்படும்.

சுயதொழில் துவங்கி பயன்பெற விரும்புவோர்  www.msmeonline.tn.gov.in/needs அல்லது http://www.indcom.tn.gov.in/needs.html என்ற இணையத்தளத்தின் மூலம் இலவசமாக விண்ணப்பிக்கலாம். இணையதளத்தில் கல்வித்தகுதிக்கான சான்றிதழ், குடும்ப அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை அல்லது வட்டாட்சியரால் வழங்கப்பட்ட இருப்பிட சான்று, விலைப்புள்ளி பட்டியல், திட்ட அறிக்கை மற்றும் சாதிச்சான்றிதழ் ஆகிய ஆவணங்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். பதிவேற்றப்பட்ட விண்ணப்பம் மற்றும் ஆவணங்கள் ஆய்வு செய்தபிறகு சம்பந்தப்பட்ட வங்கிக் கிளைகளுக்கு தகுதியின் அடிப்படையில் பரிந்துரை செய்யப்படும். கடன் ஒதுக்கீடு செய்தவர்களுக்கு, வங்கிகள் ஒப்புதல் அளித்ததும், உரிய பயிற்சி அளிக்கப்படும். பிறகு, மானியம் ஒதுக்கீடு செய்யப்படும்.

ஏற்கெனவே, மத்­திய அல்­லது மாநில அர­சின் மானி­யத்­து­டன் கூடிய ஏதே­னும் ஒரு திட்­டத்­தில் கடன் பெற்­ற­வர்­கள் இந்த திட்­டத்­தின் கீழ் விண்­ண­பிக்க இய­லாது. தொழில் முனை­ப­வர் தமிழ்நாட்­டில் கடந்த மூன்று ஆண்­டு­க­ளாக தொடர்ந்து வசிப்­ப­வ­ராக இருத்­தல் வேண்­டும். வியா­பா­ரம் சார்ந்த தொழில்­கள் (மளிகை கடை, பொருட்­களை வாங்கி, விற்­கும் தொழில்) தொடங்க திட்­டத்­தில் விண்­ணபிக்க இய­லாது. இது குறித்து கூடுதல் விபரங்களுக்கு அந்தந்த மாவட்ட தொழில் மையத்தை அனுகலாம்.

உங்கள் கையில் பணம் இல்லாமல் போகும்போது, ​​உங்கள் கைகளைத் தேய்த்து சும்மா இருக்க வேண்டியதில்லை. நீங்கள் ஃபோன்பேவைப் பயன்படுத்தலாம், இதில் உங்கள் வங்கியில் இருந்து உங்கள் பணத்தை எந்த வங்கிக்கும் செல்லாமல் எளிய வழியில் நீங்கள் விரும்பும் நபர்களுக்கு நேரடியாக அனுப்பலாம். கீழேயுள்ள லின்க்கைக் கிளிக் செய்து இப்போதே ஃபோன்பேவைப் டவுன்லோட் செய்யலாம்.

https://affilienet.o18.click/c?o=8859572&m=187&a=140691&aff_click_id={clickid}&source={pubid}

Categories

Tech |