இந்தியாவில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு புதிதாக தொழில் தொடங்க மானியம் வழங்கப்படுகிறது.
இந்தியாவில் ‘நீட்ஸ்’ திட்டத்தின் கீழ், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் புதிதாக தொழில் துவங்க 10 லட்சம் முதல் 5 கோடி ரூபாய் வரை மானியத்துடன் மாவட்ட தொழில் மையம் மூலமாக கடனுதவி வழங்கப்படுகிறது. நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பை அளிக்கக் கூடிய சிறு, குறு தொழில் முனைவோராக உருவெடுக்க விரும்புவோருக்கு பல்வேறு சலுகைகள் மத்திய, மாநில அரசுகளால் அளிக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒன்றுதான் ‘நீட்ஸ்’ திட்டம்.
புதிய தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில், ‘புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம்’ (நீட்ஸ்) என்ற திட்டம், அந்தந்த மாவட்ட தொழில் மையம் மூலமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் உற்பத்தி, சேவை தொழில்களுக்கு 10 லட்சம் ரூபாய் முதல் அதிகபட்சமாக 5 கோடி ரூபாய் வரை திட்ட மதிப்பீடு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. தொழில் திட்டங்கள் உற்பத்தி அல்லது சேவை என்ற வகையில் இருக்க வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்பெறும் உதவியை நிலம் வாங்க, அதில் தொழிற்சாலை அமைக்க, இயந்திரங்கள் அமைக்க, மூதலீடு ஆகியவற்றிற்கு உபயோகப்படுத்தப்படலாம்.
இத்திட்டத்தில் கடனுதவி பெற, விண்ணப்பதாரர், முதல் தலைமுறை தொழில்முனைவோராக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ஏதுமில்லை. பட்டப்படிப்பு அல்லது பட்டயப்படிப்பு அல்லது தொழில் பயிற்சி (ஐடிஐ) தேர்ச்சி பெற்ற 21 வயது முதல் 35 வரை உள்ள ஆண், பெண் விண்ணப்பிக்கலாம். சிறப்புப் பிரிவினராக (எஸ்.சி., எஸ்.டி., எம்.பி.சி., எக்ஸ்-சர்வீஸ்மேன், மைனாரிட்டி பிரிவினர், திருநங்கைகள், மாற்றுத் திறானாளிகள்) இருப்பின் 45 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். ‘நீட்ஸ்’ திட்டத்தின் மூலம் வங்கிக் கடனுதவி பெறும் பயனாளிகளுக்கு திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் அல்லது அதிகபட்சமாக 30 லட்சம் ரூபாய் வரை தமிழக அரசின் மானியமாக வழங்கப்படும்.
சுயதொழில் துவங்கி பயன்பெற விரும்புவோர் www.msmeonline.tn.gov.in/needs அல்லது http://www.indcom.tn.gov.in/needs.html என்ற இணையத்தளத்தின் மூலம் இலவசமாக விண்ணப்பிக்கலாம். இணையதளத்தில் கல்வித்தகுதிக்கான சான்றிதழ், குடும்ப அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை அல்லது வட்டாட்சியரால் வழங்கப்பட்ட இருப்பிட சான்று, விலைப்புள்ளி பட்டியல், திட்ட அறிக்கை மற்றும் சாதிச்சான்றிதழ் ஆகிய ஆவணங்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். பதிவேற்றப்பட்ட விண்ணப்பம் மற்றும் ஆவணங்கள் ஆய்வு செய்தபிறகு சம்பந்தப்பட்ட வங்கிக் கிளைகளுக்கு தகுதியின் அடிப்படையில் பரிந்துரை செய்யப்படும்.
கடன் ஒதுக்கீடு செய்தவர்களுக்கு, வங்கிகள் ஒப்புதல் அளித்ததும், உரிய பயிற்சி அளிக்கப்படும். பிறகு, மானியம் ஒதுக்கீடு செய்யப்படும். மத்திய அரசின் விவசாய நிதியுதவித் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. அதைப் பெறுவதற்கு வங்கிக் கணக்கில் ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 2 ஹெக்டேருக்குக் கீழ் உழவு நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய் 3 தவனைகளாக கொடுக்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி பெறும் விவசாயிகள் கட்டாயம் தங்களது ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைத்திருக்க வேண்டும். அப்படி இணைக்காவிட்டால் அவர்களுக்கு நிதி கிடைக்காது. ஆதார் இணைப்புக்கான கால அவகாசத்தை சென்ற ஏப்ரல் மாதத்தில் மத்திய அரசு நீட்டித்திருந்தது. அஸ்ஸாம், மேகாலயா, ஜம்மு & காஷ்மீர், லடாக் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளுக்கு மட்டும் 2021 மார்ச் மாதம் 31ஆம் தேதி வரையில் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மற்ற மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டிசம்பர் மாதம்தான் கடைசி அவகாசமாக அறிவிக்கப்பட்டது.
அப்படி உங்களது ஆதாரை நீங்கள் இணைக்காமல் இருந்தால் உடனடியாக வங்கிக்குச் சென்று ஆதார் நகலை உங்களது கையொப்பத்துடன் வழங்கி இணைக்கலாம். ஆன்லைன் மூலமாகவும் நீங்கள் ஆதாரை இணைக்கலாம். உங்கள் கையில் பணம் இல்லாமல் போகும்போது, உங்கள் கைகளைத் தேய்த்து சும்மா இருக்க வேண்டியதில்லை. நீங்கள் ஃபோன்பேவைப் பயன்படுத்தலாம், இதில் உங்கள் வங்கியில் இருந்து உங்கள் பணத்தை எந்த வங்கிக்கும் செல்லாமல் எளிய வழியில் நீங்கள் விரும்பும் நபர்களுக்கு நேரடியாக அனுப்பலாம்.