வாழ்ந்த காட்டுவோம் திட்டத்தின் கீழ் கருத்தரங்கம் நடைபெற்றுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் வைத்து வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் பல்வேறு துறை அலுவலர்களுடன் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கமானது திட்ட இயக்குனர் ஸ்ரீலேகா தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட செயல் அலுவலர் செல்வம், தோட்டக்கலை, வேளாண்மை, மீன்வளத்துறை, மாவட்ட தொழில் மையம் உள்ளிட்ட பல துறைகளை சேர்ந்த ஏராளமான அலுவலர்கள் கலந்து கொண்டனர். அதன்பின்னர் திட்ட இயக்குனர் ஸ்ரீலேகா கூறியதாவது. இந்த வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் நமது மாவட்டத்தில் 174 ஊராட்சிகள் செயல்பட்டு வருகிறது.
இந்த பகுதிகளில் ஏற்கனவே தொழில் செய்வோர் மற்றும் புதிதாக தொழில் தொடங்குபவர்களை கண்டறிந்து அவர்களுக்கு எப்படி தொழில் தொடங்குவது, வணிக திட்டம் தயார் செய்வது குறித்த ஆலோசனைகள் வழங்கப்படும். மேலும் தொழில் திட்டத்தின் அடிப்படையில் 30 சதவீதம் மானியத்துடன் அதிகபட்சமாக 40 லட்சம் வரை வங்கிகள் கடன் வழங்கப்படும் என அவர் கூறியுள்ளார்.