கொரோனா பரவல் காரணமாக தொழில்நுட்ப கல்லூரி மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. இதற்கிடையில் கொரோனா பரவல் சற்று குறைந்துள்ளதால் கல்லூரிகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்களுக்கு புதிய கல்வி ஆண்டுக்கான திருத்தப்பட்ட கால அட்டவணையை ஏஐசிடிஇ வெளியிட்டுள்ளது.
இதன்படி முதலாமாண்டு மாணவர்கள் தவிர பிற மாணவர்களுக்கு அக்டோபர் 1ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும். முதலாமாண்டு மாணவர்கள் அக்டோபர் 25க்குள் நேரடி இரண்டாம் ஆண்டு மாணவர்கள் அக்டோபர் 30 க்குள் கல்லூரியில் சேர வேண்டும். மாணவர்களை முழுக்கல்வி கட்டணம் செலுத்த கட்டாயப்படுத்தக்கூடாது என்று அறிவித்துள்ளது.