டெல்லியில் இருந்து கிளம்பிய விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் பெயிங் 737 மெக்ஸ் ரக விமானம் இருக்கிறது. இந்த விமானம் துபாய் நோக்கி புறப்பட்டது. இதில் 138 பயணிகள் இருந்தனர். இந்த விமானம் கிளம்பிய சிறிது நேரத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவசர அவசரமாக பாகிஸ்தான் நாட்டிலுள்ள கராச்சி விமான நிலையத்தில் தரை இறங்கியது. இங்கு தரை இறங்கிய பிறகு பயணிகள் அனைவருக்கும் அங்கு போதிய வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் மும்பையில் இருந்து கராச்சிக்கு மாற்று விமானம் புறப்பட்டது. இந்த விமானம் கராச்சி விமான நிலையத்தை சென்றடைந்த பிறகு பயணிகள் அனைவரும் அதில் ஏறி துபாய்க்கு சென்றனர். மேலும் மாற்று விமானம் வருவதற்கு 11 மணி நேரம் ஆனதால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.