வியாபாரத்தை சரிவர செய்யாததால் மகனை தந்தை தீ வைத்து கொளுத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது.
பெங்களூரு சாலையில் உள்ள வால்மீகி நகரில் இந்த சம்பவம் ஏப்ரல் 1ஆம் தேதி இந்த சம்பவம் நடைபெற்றது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மகன் தனது தந்தையின் பெயிண்ட் துணி தயாரிக்கும் தொழிலை எடுத்து நடத்தி வந்தார். ஆனால் அந்த தொழிலை சரியாக செய்யமுடியவில்லை. இந்நிலையில் மகன் அர்பித் சேத்தியாவை, தந்தை சுரேந்திர குமார் கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். மேலும், அர்பித் சேத்தியா மைசூர் சாலையில் ஒரு கடையை வாடகைக்கு எடுத்து 1.5 கோடிக்கு மேல் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து சுரேந்திரன் தனது மகனிடம் வரவு செலவு கணக்குகளை கேட்டுள்ளார். அதற்கு அர்பித் எதிர்ப்பு தெரிவித்து இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இருவருக்கும் இடையே 30 நிமிடம் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த சுரேந்திரன் மகன் மீது பெயிண்ட் தின்னரை ஊற்றி தீ வைத்துக் கொளுத்த முற்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து குடோனில் இருந்து வெளியே ஓடி வந்த மகன் நெருப்பை பற்ற வைக்க வேண்டாம் என்று தந்தையிடம் கெஞ்சியும் அதை பொருட்படுத்தாமல் தந்தை தீயைக் கொளுத்தியுள்ளார். இதில் ஓட்டம் பிடிக்க 60 தீக்காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதை தொடர்ந்து ஏப்ரல் 7 ஆம் தேதியான நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.