தொழிலாளியை மிரட்டி பணம் பறித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவட்டார் அருகே பட்டகுடிவிளை பகுதியில் ராஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருவட்டார் சாலையில் நின்று கொண்டிருந்த போது ரெதீஷ் என்பவர் தொழிலாளியை மிரட்டி பணம் கேட்டுள்ளார்.
இவர் பணம் கொடுக்க மறுத்ததால் ரெதீஷ் கத்தியை காட்டி மிரட்டி 500 ரூபாய் பணத்தை பறித்துள்ளார். இதுகுறித்து ராஜேஷ் திருவட்டார் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ரெதீஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.