Categories
தேனி மாவட்ட செய்திகள்

தொழிலாளியை தாக்கிய வழக்கு…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…. விவசாயிக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல்….!!

தொழிலாளியை காத்தியால் தாக்கிய விவாசயிக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.

தேனி மாவட்டம் தேவாரம் பகுதியில் உள்ள கருப்புசாமி கோவில் தெருவில் தங்கப்பாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது உறவினரான நாகராஜனும் அதே ஊரில் வசிக்கும் விவசாயியான கண்ணன் என்பவருக்கும் இடையே நில தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு கண்ணனுக்கும், நாகராஜ்க்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த கணவர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து நாகராஜனை தாக்க முயன்றுள்ளார். இதனை பார்த்த தங்கபாண்டி உடனடியாக கண்ணனை தடுக்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக தங்கபாண்டி மீது கத்தி குத்தியுள்ளது.

இச்சம்பவத்தில் தங்கபாண்டி பலத்த காயமடைந்தார். இது குறித்து தேவாரம் காவல்துறையினர் கண்ணனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த வழக்கு 8 ஆண்டுகளாக தேனி சப்-கோர்ட்டில் நடந்து வந்த நிலையில் இதற்க்கான இறுதி விசாரணை நேற்று நடைபெற்றுள்ளது. அப்போது வழக்கை விசாரித்து தொழிலாளியை கத்தியால் குத்திய கண்ணனுக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 3 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் அடிப்படையில் காவல்துறையினர் கண்ணனை பாதுகாப்பாக அழைத்து சென்று மதுரை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

Categories

Tech |