Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து…. 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்…. போலீஸ் விசாரணை…!!!

தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டதால் 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள குருப்பநாயக்கன்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட என்.ஜி.ஜி.ஓ காலனியில் சுரேந்தர் என்பவருக்கு சொந்தமான குச்சிப்பை பிரிண்டிங் தொழிற்சாலை அமைந்துள்ளது. நேற்று இரவு அப்பகுதியில் இருக்கும் டிரான்ஸ்பார்மரில் இருந்து அதிக அளவு மின்சாரம் வந்தது. இதனால் தொழிற்சாலை குடோனுக்கு செல்லும் மின் ஒயரில் எதிர்பாராத விதமாக தீப்பிடித்து பிரிண்டிங் செய்ய அடுக்கி வைக்கப்பட்டிருந்த குச்சிப்பை பண்டல்களின் தீ வேகமாக பரவி அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு குடோனில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள பிரிண்டிங் எந்திரங்கள், பொருட்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |