Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“தொல்லை தாங்க முடியல” லாரி உரிமையாளர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

லாரி உரிமையாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலமாக இளைய சமுதாயத்தினர் முதல் பெரியவர் வரை சில நேரங்களில் மனம் தடுமாறி தற்கொலை செய்து கொள்கின்றனர். குடும்ப பிரச்சினை, கடன் தொல்லை, சொத்து தகராறு போன்ற பல்வேறு காரணங்களால் உயிரை மாய்த்து கொள்கின்றனர். அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மூலச்சன்விளை பகுதியில் சிவதாஸ்(60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சொந்தமாக லாரி வைத்து ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் வீடு கட்டுவதற்கும் லாரி வாங்கியதற்கும் சிவதாஸ் சிலரிடமிருந்து கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.

ஆனால் வாங்கிய கடனை திருப்பி செலுத்தி இயலவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த சிவதாஸ் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதியவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |