Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தொல்லை கொடுக்கும் குரங்கு கூட்டம்…. “பிடிச்சு கொண்டு போங்க” வனத்துறையிடம் மக்கள் கோரிக்கை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள  அண்ணாநகர், இந்திரா நகர், தாயில்பட்டி மற்றும் அதை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் குரங்குகளின் தொல்லை அதிகமாக இருந்து வருவதோடு  நாளுக்கு நாள் குரங்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே செல்கிறது.

இந்நிலையில் வீட்டிற்குள் இருக்கும் பொருட்கள்  அனைத்தையும் குரங்குகள் சேதப்படுத்துவதால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே தொல்லை கொடுத்துவரும்  குரங்குகளை பிடித்து அப்புறப்படுத்த வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |