சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என சென்னை பல்கலை அறிவித்துள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைநிலை கல்வியியல் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகள், டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகள் ஆகியவற்றிற்கு செப்டம்பர் 3ஆம் தேதி முதல் தேர்வுகள் நடைபெற உள்ளது.
அதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஏற்கனவே முடிவடைந்த நிலையில், தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள் தங்களின் ஹால் டிக்கெட்டை இன்று முதல் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வமான www.ideunom.ac.in என்ற இணையதள பக்கத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.