தமிழகத்தில் கொரோனா தோற்று தீவிரமாக பரவி வந்த சூழலில் நிலைமை கட்டுக்கடங்காமல் பலி எண்ணிக்கை உயர்ந்துகொண்டே சென்றது. பாதிப்புகளும் அதிகரித்து வந்தன. இதனால் கொரோனவை கட்டுப்படுத்தும் நோக்கில் பல அதிரடியான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வந்ததன் காரணமாக பாதிப்பு கணிசமான அளவு குறைந்துள்ளது. இவ்வாறு கொரோனா காலத்தில் அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடைப்படையில் செவிலியர்கள் மற்றும் மற்ற பணியாளர்கள் நியமிக்கப்பட்டு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
ஆனால் கொரோனா முடிந்ததும் அவர்கள் வீட்டிற்கு செல்லுமாறு கூறியதால் தங்களுக்கும் பணி நிரந்தரம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா தொற்றுக் காலத்தில் பணிபுரிந்து வரும் தற்காலிக பணியாளர்கள் முன்னுரிமை அடிப்படையில் பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பு அளிக்கப்படும் என மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் பேட்டியளித்துள்ளார்.