Categories
உலக செய்திகள்

தொற்றால் பாதிக்கப்பட்ட அமெரிக்க அதிபரின்…. உடல்நிலை குறித்து…. வெள்ளை மாளிகையில் வெளியிட்ட தகவல்….!!

கொரோனா நோய் தொற்று பாதிப்புக்கு ஆளான அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நலமாக உள்ளதாக அவரது டாக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது கடந்த வாரம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் வெள்ளை மாளிகையில் உள்ள குடியிருப்பில் அவர் தனிமைப்படுத்தப்பட்டார். இந்நிலையில் 79 வயதுடைய ஜோ பைடன் மிகவும் தீவிரமாக பரவக்கூடிய உறுமாறிய ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது டாக்டரும், வெள்ளை மாளிகை கொரோனா தடுப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளருமான ஆஷிஷ் ஜா தெரிவித்துள்ளார்.

இந்த வகை கொரோனாதான் அமெரிக்காவில் தற்போது அதிகமாக பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. இருப்பினும் ஜோ பைடன் மிகவும் நலமாக இருப்பதாக டாக்டர் ஆஷிஷ் ஜா கூறியுள்ளார். இது  குறித்து அவர்  கூறியதாவது, “ஜனாதிபதிக்கு ஒமைக்ரான் பாதிப்புள்ளது. இருப்பினும் நமது தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சை முறைகள் அதற்கு எதிராக சிறப்பாக செயல்படுகின்றன. எனவே தான் ஜனாதிபதி மிகவும் நலமாக இருக்கிறார். அவரது ரத்த அழுத்தம், சுவாச விகிதம், நுரையீரல் செயல்பாடு, உடல் வெப்ப நிலை அனைத்தும் சீராக உள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |