தொப்பையை குறைக்க வழிகளை இந்த தொகுப்பில் காணலாம் :
பொதுவாக நாம் உண்ணும் உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கைமுறை மூலம் மட்டுமே உடலின் எடை உயர்வு, அடிவயிற்றில் ஏற்படும் தொப்பை மற்றும் உடல் பருமன் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. அதுவும் வயது ஆக ஆக உடல் சுறுசுறுப்பை இழப்பதால் உண்ணும் உணவுகளின் பயன்கள் முழுவதுமாய் உடலால் உபயோகப்படுத்தப்படாமல் போய்ப் பின் அவை தொப்பையாகவும் உடல் பருமன் அதிகரிப்பாகவும் வெளிப்படுகிறது.
தேவையான பொருட்கள்:
- காபி தூள் – 1ஸ்பூன்
- பட்டை – கால் டீஸ்பூன்
- தேங்காய் எண்ணெய் – 1 ஸ்பூன்
- தேன் – தேவையான அளவு
செய்முறை:
- முதலில் ஒரு டம்ளரை எடுத்து அதில் அரை ஸ்பூன் காபி தூள் போட்டுக் கொள் வேண்டும்.
- பட்டைத் தூள் கால் டீஸ்பூன் அல்லது அதை விட குறைவாக போட்டுக் கொள்ள வேண்டும்.
- ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கொள்ள வேண்டும்.
- பிறகு தேவையான அளவு தேன் சேர்த்து கொள்ள வேண்டும்.
தற்போது இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து அதனுடன் சூடான தண்ணீர் சேர்த்து காலையில் காபிக்கு பதிலாக குடிக்கலாம்.