Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தொப்பூர் கோர விபத்து… 15 வாகனங்கள் மோதல்… பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்…!!!

சேலம்- பெங்களூரு நெடுஞ்சாலையில் நேற்று 15 வாகனங்கள் ஒன்றன் மீது ஒன்றாக மோதிக்கொண்ட விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தர்மபுரி மாவட்டம் சேலம்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தொப்பூர் கணவாய் பகுதியில் நேற்று மாலை சேலம் நோக்கி அதிவேகமாக வந்து கொண்டிருந்த லாரி ஒன்று தனது கட்டுப்பாட்டை இழந்து முன்னர்ச் சென்று கொண்டிருந்த வாகனங்களின் மீது மோதி பாலத்தில் ஏறி நின்றது. சாலை தாழ்வான பகுதி என்பதால் தொடர்ந்து வந்த 12 கார்கள், இரண்டு மினி லாரிகள், ஒரு இரு சக்கர வாகனம் உட்பட 15 வாகனங்கள் ஒன்றன் மீது ஒன்றாக மோதிக்கொண்டன.

அந்த கொடூர விபத்தில் தற்போது வரை நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 5 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தக் கோர விபத்தின் காரணமாக சேலம் நெடுஞ்சாலையில் சுமார் 8 கிலோமீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.

Categories

Tech |