Categories
மாவட்ட செய்திகள்

தொப்புள் கொடி கூட அறுக்கப்படாமல்…. ஆற்றில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை….. பெரும் அதிர்ச்சி….!!!

கும்பகோணம் அருகே செம்பிய ரம்பல் கிராமத்தில் அரசலாற்றில் இன்று காலை கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் குளிக்க சென்ற போது ஆண் குழந்தை ஒன்று இறந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக குழந்தையை மீட்டபோது ஆண் குழந்தை தொப்புள் கொடி கூட அறுக்கப்படாமல் யாராலோ ஆற்றில் வீசப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

தகவல் அறிந்த நாச்சியார் கோவில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குழந்தையை மீட்டு அரசு தலைமை மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தன.ர் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். தொப்புள் கொடி கூட அறுக்கப்படாமல் பிறந்த ஆண் குழந்தையை சடலமாக ஆற்றில் வீசி சென்ற சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |