Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“தொட்டி பாலத்தில் குளிப்பதற்கு தடை” இதுதான் காரணமா….?? ஏமாற்றத்தில் சுற்றுலா பயணிகள்….!!!

தொட்டி பாலத்தில் குளிக்க கூடாது என பொதுப்பணித்துறையினர் அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தை ஒட்டி இருக்கும் தொட்டி பாலம் இயற்கை எழில் சூழ்ந்து பசுமையாக காட்சியளிக்கிறது. இதனை கண்டு ரசிப்பதற்காகவும், குளிப்பதற்காகவும் கூடலூர் மற்றும் சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் திண்டுக்கல் லோயர் கேம்ப் மின் நிலையம் அருகே 18-ஆம் கால்வாய் தலைமதவு பகுதியில் இருந்து கடந்த 14-ஆம் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தொட்டி பாலத்தில் குளிக்கும் போது எதிர்பாராதவிதமாக ஒரு வாலிபர் தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். எனவே அந்த இடத்தை பொதுப்பணித்துறையினர் ஆபத்தான பகுதி என குறிப்பிட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் அங்கு குளிப்பதற்கு தடை விதித்து பொதுப்பணித்துறையினர் அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். மேலும் அறிவிப்பை மீறி வருபவர்களை தடுக்க அங்கு போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Categories

Tech |