Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தொடர் விடுமுறை…. குவிந்த சுற்றுலா பயணிகள்….. களைகட்டியது கன்னியாகுமரி….!!

விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக உள்ளது.

சுற்றுலா தலமான கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் வருகை புரிகின்றனர். இந்நிலையில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை என்பதால் வழக்கத்தைவிட சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக உள்ளது. இவர்கள் அதிகாலை வரும் சூரிய உதயத்தில் பார்த்து ரசித்துவிட்டு கடலில் நீராடி மகிழ்ந்தனர். அதன்பிறகு பகவதி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு படகில் சென்று மகிழ்ந்தனர். இதனையடுத்து காந்தி மண்டபம், காமராஜர் மணிமண்டபம், தமிழன்னை பூங்கா, சுரங்க மீன் கண்காட்சி போன்ற இடங்களையும் சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.

இதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் கோதை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இங்கு குவிந்த சுற்றுலா பயணிகள் உற்சாகமாக அருவியில் குளித்து மகிழ்ந்தனர். அதன்பிறகு அருவியின் மேற்பரப்பில் இருக்கும் தடுப்பணையில் படகு சேவை தொடங்கியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியாக படகில் சென்று இயற்கை அழகை பார்த்து ரசித்தனர். இதைத்தொடர்ந்து மாத்தூர் தொட்டிப்பாலம், பத்மநாதபுரம் அரண்மனை, உதயகிரி கோட்டை, வட்டக்கோட்டை போன்ற இடங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மேலும் சுற்றுலா பயணிகளின் வருகையால் மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் களைகட்டியது.

Categories

Tech |