Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“தொடர் வழிப்பறி” 2 மாதம் எஸ்கேப்… இறுதியாக மோட்டார் சைக்கிளால் சிக்கிய இருவர்….!!

2 மாதமாக வழிப்பறியில் ஈடுபட்டவந்த இருவரை காவல்துறையினர் கைது செய்து உள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அமைந்த ஆற்காடு டவுன் காவல்துறையினர் ஆற்காட்டில் இருந்து ஆரணி செல்லும் சாலையில் காவல் நிலையம் முன்பு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பதிவு எண் இல்லாத மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். அவர்களை பிடித்து விசாரணை செய்யும்போது சிப்காட் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் மற்றும் ராணிப்பேட்டையை சேர்ந்த அருண் என்பதும் தெரியவந்தது.

மேலும் இருவரும் கடந்த இரண்டு மாதங்களாக ஆற்காடு, திமிரி, சிப்காட் பகுதியில் செல்லும் நபர்களை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டியும் ,மிளகாய் போடி துவியும் நகைகளை பறித்துச் செல்வது தெரிய வந்ததும் அவர்களை போலீசார் கைது செய்தனர் .மேலும் அவர்களிடமிருந்து 3 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |