ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஊமாரெட்டியூர், நெருஞ்சிப்பேட்டை, குருவரெட்டியூர், சின்ன பள்ளம் போன்ற பகுதிகளில் மிக முக்கியமான 7 பள்ளங்கள் அமைந்துள்ளது. இங்கு மழைக்காலங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். கடந்த 3 ஆண்டுகளாக பாலமலையில் மழை பெய்யாததால் பள்ளங்களில் தண்ணீரின்றி வறண்டு காணப்பட்டது. இந்நிலையில் கனமழை காரணமாக சிறு சிறு திடீர் அருவிகள் தோன்றியுள்ளது.
இதுகுறித்து பாலமலையில் இருந்து வந்த மக்கள் கூறியதாவது, சின்னபள்ளம் வழுக்குப் பாறையில் இருக்கும் அருவியில் 60 அடி உயரத்தில் இருந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த அருவிக்கு செல்லும் பாதையை சீரமைத்து தர வேண்டும் என கூறியுள்ளனர்.