ஊட்டியில் தொடர் மழை காரணமாக மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகின்ற நிலையில் நிலத்தில் ஈரப்பதம் அதிகரித்து ஊட்டியில் இருந்து மைசூர் செல்லும் சாலையில் லவ்டேல் என்ற இடத்தில் நேற்று இரவு மரம் முறிந்து விழுந்ததனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டதையடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மரத்தை எந்திரம் மூலம் துண்டு துண்டாக வெட்டி அகற்றினார்கள். இதனால் அங்கு ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு பின் சீரானது.