தமிழில் முகமூடி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான பூஜை ஹெக்டே. அதன்பின் தமிழில் போதிய அளவு வாய்ப்புகள் கிடைக்காததால் தெலுங்கு சினிமாவுக்கு சென்றார். தற்போது தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் பூஜா பாலிவுட் சினிமாவிலும் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான ராதே ஷ்யாம், ஆச்சார்யா மற்றும் பீஸ்ட் போன்ற திரைப்படங்கள் போதிய அளவு வரவேற்பை பெறவில்லை. இதனால் பூஜா ஹெக்டேவுக்கு தற்போது பட வாய்ப்புகள் குறைந்துள்ளது. இந்நிலையில் இயக்குனர் பூரி ஜெகன்நாத் நடிகை பூஜாவை ஜன கன மன என்ற திரைப்படத்தில் ஒப்பந்தம் செய்திருந்தார்.
ஆனால் லைகர் படம் படு தோல்வி அடைந்ததால் ஜன கன மன படத்தை தற்போதைக்கு எடுக்கும் ஐடியாவில் அவர் இல்லை. தொடர் தோல்விகளால் துவண்டு போயிருக்கும் பூஜா ஜன கன மன திரைப்படத்தின் மூலமாவது தன்னுடைய மார்க்கெட்டை உயர்த்திக் கொள்ளலாம் என்று கணக்கு போட்டார். ஆனால் தற்போது அந்த வாய்ப்பும் பறிபோய்விட்டது. மேலும் நடிகை பூஜா ஹெக்டே தற்போது புதிய படங்களில் எதுவும் ஒப்பந்தமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் நடிகை பூஜா மிகுந்த மன வேதனையில் இருக்க, இயக்குனர் பூரி ஜெகன்நாத்தை ரசிகர்கள் பலரும் இணையதளத்தில் விளாசி வருகின்றனர். அதாவது நடிகை பூஜாவை வைத்து தரமற்ற படங்களை இயக்கியதாக பூரி ஜெகன்நாத்தை பூஜாவின் ரசிகர்கள் விமர்சிக்கின்றனர்.