Categories
சினிமா தமிழ் சினிமா

“தொடர் தோல்வி”…. எஸ் சொல்லலாமா…? குழப்பத்தில் இருக்கும் நாக சைத்தன்யா…!!!!!!

தொடர் தோல்விகளை சந்தித்ததால் நாக சைத்தன்யா தற்பொழுது குழப்பத்தில் இருக்கின்றார்.

தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார். இவர் நடிப்பில் வெளியான தேங்க் யூ திரைப்படம் தோல்வியடைந்தது. இதையடுத்து வெளியான லால் சிங் சத்தா திரைப்படம் படுதோல்வி அடைந்தது. அடுத்தடுத்து இரண்டு திரைப்படங்கள் தோல்வி அடைந்ததால் சற்று யோசிக்கின்றார். அவரின் படங்கள் தோல்வி அடைந்தாலும் பெரிய இயக்குனர்கள் அவரை வைத்து படம் பண்ண விரும்புகின்றார்கள்.

இந்த நிலையில் இயக்குனர் விமல் கிருஷ்ணாவும் நாக சைதன்யாவும் தொடர்பு கொண்டு இருக்கின்றார்கள். ஆனால் நாக சைதன்யா இதுவரைக்கும் ஓகே சொல்லவில்லை. இரு திரைப்படங்கள் அடுத்தடுத்து தோல்வி அடைந்ததால் தவறான முடிவை எடுத்து விடக்கூடாது என எச்சரிக்கையாக உள்ளார் நாக சைத்தன்யா. இந்த நிலையில் அவர் தூதா தெலுங்கு தொடர் மூலம் வெப்தொடரிலும் அறிமுகமாகவுள்ளார். இத்தொடரை விக்ரம் குமார் இயக்க பார்வதி திருவோத்து, ப்ரியா பவானி சங்கர், தருண் பாஸ்கர் உள்ளிட்டோர் நடிக்கின்றார்கள் குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |