மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் நாட்டில் உள்ள பல்வேறு இடங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால், சிந்த் மற்றும் பலுச்சிஸ்தான் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் ஏற்படுவதற்கான அபாயம் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் மழையின் காரணமாக பல வீடுகள் மற்றும் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் அந்நாட்டு மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இதனையடுத்து வடகிழக்கு அரபிக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும். இந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது அடுத்த 2 நாட்களுக்குள் ஓமனை நோக்கி நகரும் என கூறப்பட்டுள்ளது. மேலும் தொடர் மழையின் காரணமாக திடீரென மின்சாரம் 50 வயது மதிக்கத்தக்க அக்பர் என்ற நபர் உயிரிழந்ததாக நாட்டு உள்ளூர் செய்தி நிறுவனம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.