தொடர் மழையால் திம்பம் மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்டதால் 2 இடங்களில் மரங்கள் சாய்ந்து கீழே விழுந்தது. அதனால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் கர்நாடகாவை சேர்க்கும் முக்கிய வழித்தடமாக திம்பம் மலைப்பாதை இருக்கிறது. 24 மணி நேரமும் 27 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட அந்த வழியில் வாகனங்கள் பயணிக்கின்றன. இந்நிலையில் ஆசனூர் மலைப்பகுதியில் பெய்த கனமழையால் திம்பம் சாலையில் உள்ள அருவிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டியது. இந்த காரணங்களால் அங்கிருந்த மரங்கள் வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது.
எனவே 2 மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து பாதிக்கப்பட்டன. அதனால் கர்நாடகாவில் இருந்து வந்த வாகனங்கள் ஆசனூர் சோதனைச் சாவடியிசாவடியிலும், தமிழகத்திலிருந்து வந்த வாகனங்கள் பண்ணாரி சோதனை சாவடியிலும், நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து 3 மணி நேரத்திற்கு பிறகு பொதுப்பணித்துறையினர் சாலையில் கிடந்த மண்சரிவு மற்றும் மரங்களை அப்புறப்படுத்தினர். அதன் பின்னர் பேருந்துகள் மற்றும் சிறிய இலகுரக வாகனங்கள் பாதிக்கப்பட்டன. தொடர்ந்து அப்புறப்படுத்தும் ஜேசிபி மூலம் பணி நடைபெற்று வருகிறது.