தென்பெண்ணை ஆற்று நீரில் ரசாயன நுரைகள் சூழ்ந்து இருப்பதால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளார்கள்.
கர்நாடக,ஆந்திரா மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளன. இதனால் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கெலவரப்பள்ளி அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அணைக்கு தற்சமயம் நீர்வரத்து வினாடிக்கு 1,033 கன அடி உயர்ந்துள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு 800 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகின்றன.
இந்நிலையில் தென்பெண்ணை ஆற்றில் ரசாயனக் கழிவுகள் கலந்து வருவதால் ஆற்று நீர் மாசடைந்து உள்ளன. மேலும் அணையிலிருந்து வெளியேறும் நீரை ரசாயன நுரைகள் சூழ்ந்திருக்கின்றன. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் நுரைகள் காற்றில் பறந்து ஆங்காங்கே படர்ந்து கிடக்கின்றன. ஒரு வாரத்திற்குள் மேலாக ரசாயன நுரைகள் சூழ்ந்து இருப்பதால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளார்கள்.