வரலாற்றில் முதல்முறையாக நியூசிலாந்துக்கு எதிரான தொடர்ந்து 5 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி தோல்வியடைந்து மோசமான சாதனை படைத்துள்ளது..
இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றது. இதில் டி20 கிரிக்கெட் தொடரை ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி மழைக்கிடையே 1:0 என்ற கணக்கில்கைப்பற்றியது. இதனைத்தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் இன்று ஆக்லாந்தின் ஈடன் பார்க் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது..
அதன்படி களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 306 ரன்களை குவித்தது.. அதிகபட்சமாக ஷ்ரேயஸ் ஐயர் 80 (76) ரன்களும், ஷிகர் தவான் 72 (77) ரன்களும் சுப்மன் கில் 50 (65) ரன்களும் எடுத்தனர். மேலும் சஞ்சு சாம்சன் 36 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 37 ரன்களும் எடுத்தனர்..நியூசிலாந்து அணியில் டிம் சவுத்தி மற்றும் லாக்கி பெர்குசன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், ஆடம் மில்னே ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
இதையடுத்து 307 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய பின் ஆலன் 22 மற்றும் டெவான் கான்வே 24 ரன்களும் எடுத்து அவுட் ஆகினர். இதையடுத்து டேரில் மிட்செல் 11 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். நியூசிலாந்து அணி 19.5 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 88 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் கேன் வில்லியம்சன் மற்றும் டாம் லேதம் இருவரும் ஜோடி சேர்ந்து இந்திய பந்துவீச்சை சிதறடித்தனர்..
கடைசியில் நியூசிலாந்து அணி 47. 1 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 309 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.. கேன் வில்லியம்சன் 98 பந்துகளில் 94* ரன்களும், டாம் லேதம் 104 பந்துகளில் 19 பவுண்டரி, 5 சிக்ஸர் உட்பட 145* ரன்களும் எடுத்து அவுட் ஆகாமல் களத்தில் நின்று அணியை வெற்றிபெற வைத்தனர்..
இந்திய அணியில் உம்ரான் மாலிக் 2 விக்கெட்டுகளும், ஷர்துல் தாகூர் ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.. இந்திய அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற நியூசிலாந்து அணி 1 : 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கிடையேயான 2ஆவது ஒருநாள் போட்டி நவம்பர் 27 ஆம் தேதி ஹாமில்டனில் செடான் பார்க் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா இன்று தோல்வியடைந்ததன் மூலம் ஒரு மோசமான சாதனையை படைத்துள்ளது. அதாவது நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா வரலாற்றில் முதல் முறையாக 5 ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியடைந்துள்ளது. இது இந்தியாவுக்கு தொடர்ந்து 5ஆவது தோல்வியாகும்.அதுமட்டுமில்லாமல் , இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்டில் நியூசிலாந்தின் இரண்டாவது வெற்றிகரமான ரன் சேஸ் இதுவாகும். இந்தியாவுக்கு எதிராக நியூசிலாந்து ஒருநாள் போட்டியில் வலுவாக இருப்பதை இது உணர்த்துகிறது.
https://twitter.com/hitman_Rohit_07/status/1596072633422196736