மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் பாதிரிமூலா, அய்யன்கொல்லி ஆகிய பகுதிகளில் மரக்கிளைகள் முறிந்து மின் கம்பிகள் மீது விழுந்ததால் அங்கு மின் தடை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அரிதினி பகுதியில் வசிக்கும் சசிதரன் என்பவருக்கு சொந்தமான இரண்டு ஆடுகள் மின்னல் தாக்கியதால் பரிதாபமாக இறந்தன.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது தொடர் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறோம். இதனையடுத்து இடிந்து விழும் நிலையில் இருக்கும் கட்டிடங்களுக்கு அருகில் பொதுமக்கள் செல்லக் கூடாது எனவும், பாதுகாப்பான இடங்களில் தங்க வேண்டும் எனவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.