Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து பெய்து வரும் மழை…. அதிகபட்ச அளவு பதிவு…. மகிழ்ச்சியில் விவசாயிகள்….!!

தொடர்ந்து கோடை மழை பெய்து வரும் நிலையில் அதிகபட்சமாக 222 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஓரிரு வாரமாக தொடர்ந்து கோடை மழை பெய்து வரும் நிலையில் நேற்று முன்தினம் பெய்த மழையில் அதிகபட்சமாக 63 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இந்நிலையில் நேற்று காலையில் இருந்து மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துள்ளது.

அதன்படி புதுசத்திரத்தில் 63 மி.மீ, மங்களபுரத்தில் 45 மி.மீ., சேந்தமங்கலத்தில் 25மி.மீ, திருச்செங்கோட்டில் 22 மி.மீ, ராசிபுரத்தில் 20 மி.மீ, கொல்லிமலை 9 மி.மீ, பரமத்திவேலூரில் 6 மி.மீ, நாமக்கல் 2 மி.மீ என மொத்தம் 222 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Categories

Tech |